Type to search

Headlines News World News

அமெரிக்க – ஈரான் ஒப்பந்தத்தில் திருத்தங்களைக் கோரும் டிரம்ப்?

Share

இவ்வருட தொடக்கத்தில் ஆரம்பமான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க – ஈரான் ஒப்பந்தத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஹோர்முஸ் நீரிணை மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவது தொடர்பான விடயங்களிலேயே இந்தத் திருத்தங்கள் கோரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. 

எனினும், இது குறித்து வெள்ளை மாளிகை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வௌியிடவில்லை. 

இதேவேளை, ஈரானின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் வரை தெஹ்ரான் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் உடன்படாது என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மொஹமட் பாகர் காலிபாப் நேற்று தெரிவித்தார். 

ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கான கட்டமைப்பு குறித்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதியும் அவரது சிரேஷ்ட உதவியாளர்களும் கடந்த வாரம் கூடினர். 

எனினும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான முடிவுகள் ஏதுமின்றி இக்கூட்டம் நிறைவடைந்தது. 

60 நாட்களுக்கு வன்முறைகளை நிறுத்துதல், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அழைப்பு மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உள்ளடக்கப்பட்டிருந்தன. 

ராஜதந்திர முயற்சிகள் முன்னேற்றமடையும் பட்சத்தில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானுக்கு எதிரான சில தடைகள் நீக்கப்படலாம் எனவும், இதன் மூலம் முடக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள சொத்துக்களை ஈரான் அணுக முடியும் எனவும் சிபிஎஸ் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link