திபெத்தில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Share
திபெத்தில் இன்று அதிகாலை 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நில அதிர்வு இந்திய நேரப்படி அதிகாலை 3.10 மணிக்கு சுமார் 38 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவலும் வெளியிடவில்லை.
அதேபோல இன்று காலை 9.57 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது பூமிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.
புவி தட்டு மோதல்களால் ஏற்படும் அதிர்வுகளில் திபெத்தும் நேபாளமும் முக்கிய பிளவுகோட்டில் அமைந்துள்ளநிலையில் அங்கு இந்திய யூரேசிய தட்டுடன் இணைகின்ற சூழல் நிலவுவதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டது.
இமயமலை சிகரங்களின் உயரங்களை மாற்றும் அளவுக்கு வலுவாக மாறக்கூடிய புவித்தட்டு உயர்வினால் இது போன்ற பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
ஆழமான நிலநடுக்கத்தை விட ஆழமற்ற நிலநடுக்கம் மிகவும் அதிக ஆபத்தானவை. ஏனெனில் ஆழமற்ற நிலநடுக்கங்களின் நில அதிர்வு அலைகள் தரைக்கு குறைந்த தூரமே பயணிப்பதால், அவை வலுவான நிலையிலும் அதிக கட்டமைப்பு சேதம் மற்றும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கின்றன.
திபெத்தில் 8.0 அல்லது அதற்கு இணையான ரிக்டர் அளவு கொண்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள், பக்கவாட்டு நகர்வுப் பிளவுகளில் ஏற்படுகின்றன.
செங்குத்துப் பிளவு நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் சிறியவை.


