பாதீடு கற்றுத் தரும் பாடம் கந்தறு நிலையில் நாடு
Share
2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை (பாதீடு) நேற்று முன்தினம் பிரதம ரும் நிதியமைச்சருமாகிய மகிந்தராஜபக் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அவர் சமர்ப்பித்த 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு தரப்போகும் நன்மை என்ன என்று கேட்டால் எதுவுமில்லை என்பதுதான் பதில்.
2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அனுமதி யைப் பெறுகின்ற சம்பிரதாயம் நடந்தேறியுள்ளது.
அவ்வளவுதான் என்பதோடு அதனை நிறுத் திக் கொள்வதுதான் பொருத்தம் போலத் தெரி கிறது.
குறித்த வரவு-செலவுத் திட்டத்தை பார்க் கும்போது ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகிறது.
முன்பெல்லாம் வரவு-செலவுத் திட்டம் நள் ளிரவு வேளையில்தான் வாசிக்கப்படும்.
ஒருமுறை நிதியமைச்சர் சமர்ப்பித்த வரவு -செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலை கள் உயர்த்தப்பட்டிருந்தன.
அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்புச் செய்யப்பட்டிருந் தன.
இது தொடர்பில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஈழநாடு பத்திரிகையின் ஆசிரி யர் சபாரட்ணம் மாஸ்ரர் அவர்கள் நள்ளிரவில் நட்டம் பயின்றாதே எனத் தலைப்பிட்டு ஆசிரியர் தலையங்கம் வரைந்திருந்தார்.
அதில் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் நட்டத்தையும் கஷ்டத்தையும் தலை யில் சுமக்கப் போகின்றனர் எனும் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
அன்று அவர் எழுதிய ஆசிரியர் தலை யங்கமே இப்போது நம் நினைவுக்கு வரு கிறது.
இவை ஒருபுறமிருக்க, மிகப்பெரும் படோப காரத்துடன் ஆட்சிப்பீடமேறிய ராஜபக் அர சாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் இத்துணை தூரம் பெறுமதி இழந்ததாக இருக்கும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், பிரதமர் மகிந்த ராஜபக்வே நிதியமைச்சர்.
ஆக, 2021ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், முதலீட்டுக்கான சலுகைகள், சம்பள அதிகரிப் புகள், பயிற்சித் திட்டங்கள் என ஏகப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவை எதுவும் வரவு-செலவுத் திட்டத்தில் இல்லை.
எதையும் பகட்டாகச் செய்ய வேண்டும் என்ற நினைப்போடு செயற்படுகின்ற ராஜபக் தரப்பால் 2021ஆம் ஆண்டுக்கான பாதீட்டை அபிவிருத்திக்கான பாதீடாக முன்வைக்க முடியாமல் போனமைக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால், நாடு கந்தறுந்த நிலை யில் இருப்பதுதான் இவற்றுக்கெல்லாம் கார ணம் என்பதைக் கண்டறிய முடியும்.
அதாவது ஜனாதிபதியாக, பிரதமராக, நிதியமைச்சராக யாரும் இருக்கலாம்.
ஆனால் வரவு-செலவுத் திட்டம் என்று வரும்போது அதனைத் தயாரிப்பதில் பொருளி யல் சார் விடயங்கள் முன்னெழவே செய்யும்.
அந்த விடயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தாம் நினைத்தபடி வரவு-செலவுத் திட்டத்தை தயாரிக்க முடியாது என்பதே உண்மை.
இந்த அடிப்படையில் நாட்டின் சமகால பொருளாதார நிலைமை ஆரோக்கியமாக இல்லை என்பதையே 2021ஆம் ஆண்டின் பாதீடு கட்டியம் கூறி நிற்கிறது.