தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியுள்ளது. ...
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் 49 பேர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மாலி இராச்சியத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ட்ரக் வண்டியொன்றில் வீடு திரும்பியுள்ளனர். நைகரின் வடக்கு பகுதியிலுள்ள சஹாரா பாலைவனம் ஊடாக ட்ரக் பயணித்த போது வண்டியில் இயந்திர கோளாறு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே சிக்குண்ட ...
ஓமானில் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. மேற்காசிய நாடான ஈரான் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், நிரந்தர அமைதிக்காக நடந்து வரும் பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது ...
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்கா ஆதரவளித்த போர்நிறுத்த நிபந்தனைகளை லெபனானின் ஆயுதமேந்திய ஹிஸ்புல்லா இயக்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் தலைவர் நயீம் காசிம் (Naim Qassem) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பேச்சுவார்த்தைகள் லெபனானுக்கு “வீணானவை” மற்றும் “அவமானகரமானவை” என்றும், லெபனான் மக்களின் பரந்த ...
சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதன் அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கும் அடுத்தடுத்து பரவியது. இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அவை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ...
எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் மின்சார மோட்டார்த் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க – ஈரானிய யுத்த மோதல்களுக்கு மத்தியில் உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையானது அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு ...
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மூவரும் ஆண்கள் என்றும், அவர்கள் அங்கு ...
குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்தத் ...
முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு மற்றும் அதைத் தொடர்ந்து அடக்க ஏற்பாடுகள் ஒத்திவைக்கப்பட்ட பல மாதங்களுக்குப் பிறகு, அவருக்காக மூன்று நாள் இறுதி சடங்கு நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக, ஈரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஈரானுக்கு ...
இவ்வருட தொடக்கத்தில் ஆரம்பமான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க – ஈரான் ஒப்பந்தத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணை மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவது தொடர்பான விடயங்களிலேயே இந்தத் திருத்தங்கள் கோரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் ...