எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் புதன்கிழமை முதல் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
தெற்கு லெபனானில் உள்ள சுமார் ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி உத்தரவிட்டுள்ளார். ‘X’ தளத்தில் அரபு மொழியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அத்ராயி, பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக ...
தமிழக சிரேஷ்ட அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்ட செங்கோட்டையன் அண்மையில் இடம்பெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் விஜய் தலைமையிலான தமிழக ...
லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் கார் விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ...
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், 21 வயதுடைய நசீர் பெஸ்ட் என பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நபர், இதற்கு முன்னரும் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயற்சித்தமைக்காகக் கைது செய்யப்பட்டவர் என்பது பாதுகாப்புத் தரப்பினரால் ...
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நேற்று (23) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் ...
வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு வெடிப்பு சம்பவித்த தருணத்தில், ...
கொங்கோ இராச்சியத்தில் பரவி வரும் இபோலா வைரஸ் தாக்கம் உயர் நிலையிலிருந்து அதி உயர் நிலைக்கு மாறியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் இந்த நிலை குறைந்த மட்டத்தில் இருந்த போதிலும் ஆபிரிக்க வலயத்துடன் ஒப்பிடுகையில் உயர் மட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ...
274 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை (8,849 மீற்றர்) ஒரே நாளில் நேபாளப் பகுதியூடாக சென்றடைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளதாக நேபாள மலையேற்றக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எவரெஸ்ட் வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை அதிகமானோர் சிகரத்தைத் தொட்டது இதுவே முதல் முறையாகும். ...
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் பிரதானி துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவித்துள்ளார். “எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் ஆபிரகாம் எனது பாறை போன்ற பலமாக ...