நாளை திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மாகாணத்துக்குள்ளான போக்கு வரத்துக்கு பாஸ் அனுமதி தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் சுகாதார நடைமுறையுடன் ...
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்த வயோதிபப் பெண் மீதும் தாக்குதல் நடத்தியதோடு வீட்டு உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பின்னிரவு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபத் தாய் காயமடைந்த நிலையில் ...
கொரோனா வைரஸ் பரவியுள்ள பின்னணியில் பொதுத் தேர்தலைவிட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் ...
நாட்டில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் மிகவும் அருவருக்கத்தக்கவை என்பதுடன், கௌதம புத்தரின் உன்னத போதனைகளுக்கும் முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது உத்தி யோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, ...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் அலுவலங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களை மாத்திரம் அழைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ...
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மதுபான விற் பனை நிலையங்கள் திறக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளன. நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற மற்றும் தளர்த்தப்படும் சந்தர்ப் பங்களில் எக்காரணம் கொண்டும் மதுபான சாலைகளை திறக்க ...
கோவிட் -19 தொற்று நோய் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் எந்தவொரு தனியார் துறை ஊழியர்களும் வேலையிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்கள் பணியில் இருக்கும் காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் சம்பளத்தையும் செலுத்த வேண்டும் என்றும் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ...
வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஊரெழு பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை பொலிஸாரால் முறியடிக்கப் பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நீக்கினால் பேராபத்து ஏற்படலாம் என அரச புலனாய்வு பிரிவினர், சுகாதார அமைச்சை எச்சரித்துள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே படிப்படியாக ஊரடங்கை தளர்த்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கை நீக்குவது ...
அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளராககள ...