Type to search

Local News

ஒருவர் மூலம் 522 பேருக்கு கொரோனா பரவும் ஆபத்து

Share

மினுவாங்கொட கொரோனா கொத்தணி மற்றும் இரண்டாவது தொற்றாளர்கள் வரை சென்றதனை அவதானிக்க முடிந்ததாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடயில் 26 பேரும் கம்பஹாவில் 23 பேரும் திவுலப் பிட்டிய பிரதேசத்தில் 22 பேரும் பெரும்பான்மையாக அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக பாணந்துறையில் ஒரு தொற்றாளரும் கொழும்பில் இருவரும், பொலநறுவையில் இருவரும் மாத்தளையில் ஒருவரும் என நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு கொரோனா நோயாளி ஊடாக 522 பேருக்கு கொரோனாப் பரவக் கூடும்.

எனினும் முழு மையாகக் கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் நுழைந்துள்ளதாக உறுதியாகக் கூற முடியா தென அவர் சுட்டிக்காட்டியுள் ளார். வைரஸ் சமூகத்திற்கு பர வுவது மக்களின் செயற்பாட்டிற்கமையவே கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றின், முதல் தொற்றாளர் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் அடுத்ததாக இந்த வைரஸினால் பாதிக்கப்படக் கூடியவர்கள் யார் என்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதே முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link