மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவ மாவட்டங்களிலும் கடும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (12) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும். பிற்பகல் 1.00 மணிக்கு மேல், ...
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் காரணமாக ஏற்படும் மேலதிக செலவுகளை, மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது மின் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கக் கூடாது என இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளின் போது மின் உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காகச் செலவிடப்படும் நியாயமான செலவுகள் ...
சட்டவிரோதமான முறையில் 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அலங்கார செடிகளை நாட்டுக்குள் கொண்டு வந்த பயணி ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் இந்தியாவின் பெங்களூரு ...
யாழ். காரைநகரை அண்டிய இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர். இந்தியாவின் காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்கப் புறப்பட்ட மேற்படி மீனவர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி ...
திருகோணமலை- நாமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (11) மாலை இடம் பெற்றுள்ளது. மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டி வேகமாக நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை ...
கொழும்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபானங்களை மதுவரித் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கொழும்புப் பிரதேசத்திலுள்ள பல விற்பனை நிலையங்களில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவரித் ...
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிப் பரப்புகளை அளவீடு செய்து, அதன் உண்மையான உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பாக, காணி உரிமையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (11) யாழ். மாவட்ட செயலகத்தில் ...
ஹல்துமுல்ல பகுதியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் குழுவொன்று பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய சம்பவத்துக்காக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததால் ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தீயத்தலாவை அடிப்படை மருத்துவமனைக்கு அவசர நிலையில் மாற்றப்பட்டார். மருத்துவமனை தகவலின்படி, ...
கற்பிட்டி பகுதியில் உள்ள பங்களவத்தை மற்றும் சேதவாத்தை கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சுமார் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘விஜய’ கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினர் ஏப்ரல் 06 ஆம் ...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை இல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த தற்காலிக தளர்வு பெட்ரோல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த காலப்பகுதியில் ...