கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் எவ்வித அடையாளக் குறிகளுமற்ற நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான அழகு சாதனப் பொருட்களைப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கைப்பற்றியுள்ளது. காவல்துறை விசேட பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் நேற்று முன்தினம் (09) இந்தச் சோதனை நடவடிக்கை ...
மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் நேற்று (10) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ...
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை நிறைவடைந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த முதியவர், தனது வீட்டின் ...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இன்று விவாதிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொற்றா நோய்களால் நாட்டில் ஏற்படும் மொத்த இறப்புகளில் ...
பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, செலவுகளைக் ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது. பாடசாலை நிகழ்வுகளுக்காகப் பெற்றோர்களிடமிருந்து அதிகப்படியான பணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்காலத்தில் நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் மிகவும் எளிமையான முறையிலும், குறைந்த ...
ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த ஹோட்டலில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுக்கு ...
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று ...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை ...