டித்வா சூறாவளியினால் சேதமடைந்து, அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட புதிய இல்லமொன்றில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (14) கலந்துகொண்டார். அநுராதபுரம், கல்நேவ பிரதேசத்தின் மல்பெலிகல கிராமத்தைச் சேர்ந்த இந்திரஜித் சம்பத் என்பவரின் வீட்டிற்குப் பால் காய்ச்சி குடிபுகும் நிகழ்வோடு, ...
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (14) கம்பஹாவில் இடம்பெற்றன. சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, கம்பஹா தர்ஷன வீரசிங்கவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ...
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் பண்டதரிப்பு, தெல்லிப்பழை, வறுத்தலைவிளான், வசாவிளான் மற்றும் மணற்காடு போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில ...
இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் நேற்று (14) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின் ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த 204 ...
கிளிநொச்சி ஏ – 9 பிரதான வீதியில், நேற்று பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் வான் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அதிவேகமாகச் சென்ற வான் ஒன்றே, பாதசாரி கடவையூடாக வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ...
திருகோணமலை – சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நேற்று மாலை நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே ...
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது 817 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கையானது ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். ...
2023/2024 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள், 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 2026 மே 08 ஆம் திகதி வரை அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளன. நேர்முகப்பரீட்சைக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, ...
புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதற்கு, வார இறுதி நாட்களிலும் முற்றுகைகளை முன்னெடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை தீர்மானித்துள்ளது என பதில் பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் அல்லது மோசடிகள் குறித்து பொதுமக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது. இந்தப் போரின்போது அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சில வெளிநாடுகளின் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின. ...