அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான ...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சுகாதார அமைச்சு தமக்கு வழங்கிய உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 8.00 ...
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல, கென்ஹத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த யுவதி, வீட்டின் அருகே உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த தனது பெற்றோரை வீட்டிற்கு அழைப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது ...
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (09) காலை நாடு திரும்பியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அவர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கிப் பயணித்திருந்தார். முன்னதாக இலங்கையில் வைத்து ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ...
வவுனியா – சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்களின் ...
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான பணியாளர் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதன் மூலம், இலங்கைக்குக் கிடைக்கும் மொத்த நிதி உதவி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும். இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள IMF, 2025-ஆம் ஆண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியும், 2026 மார்ச் மாதத்தில் ...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெறுவது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து அதிகாரிகளுக்கும் கடும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அன்பளிப்புகளை வழங்குவதோ அல்லது அவர்கள் அவற்றை ஏற்பதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு விருந்துபசாரங்களுக்காக பொலிஸ் ...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று (08) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே செனதீர இதனைத் தெரிவித்துள்ளார். பண்டிகைக் ...
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இன்று (09) அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி ...
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 2,712 சிறுவர்கள் பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகபட்சமாக இதய அறுவைச் சிகிச்சைகளுக்காக 1,025 சிறுவர்கள் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார். ...