களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (16) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, குறித்த ரயில் பாதையின் ஆணிகளை கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல உபகரணங்களைப் பொலிஸாரால் மீட்க முடிந்துள்ளது. இதன்படி, சந்தேகநபர் வசித்து வந்த வீட்டிற்குள் மறைத்து ...
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி, 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 162 பேர் தற்போது 05 ...
வவுனியாவில் குறைந்த வருமானத்தினை பெறும் ஐந்து குடும்பங்களுக்கு அரசினால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிக்கப்பட்டது. தமக்கென சொந்தமான இடம், அழகான வாழ்க்கை என்ற கருப்பொருளுடன் குறைந்த வருமானம் பெறுபவர்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கும் நோக்குடன் அரசங்காத்தினால் இந்ததிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தவகையில் வவுனியாவில் கற்குழி, கூமாங்குளம், அவுசதபிட்டிய, அலகல்ல,நெடுங்குளம் ஆகிய ...
நிந்தவூர் கலாச்சார மண்டபம் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்தப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று ...
இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸாரினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தில் ...
மாத்தறை, வெலிகமை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வீதியில் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேற்படி சிறுவன் நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, அந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ...
யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ அறிவித்துள்ளார். சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவை அவசரமாக மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளதால், இந்த நடவடிக்கை ...
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் ஒன்றுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 30% சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50% மேலதிக வரி விதிக்கப்படும். ஜனாதிபதி அநுர குமார ...
நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இந்த அனர்த்த நிலைமை ...
இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ...