மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் நேற்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதை நேற்று மாலை 5.00 மணியளவில் அவதானித்த ...
பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளை இன்று (08) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார். இதற்கமைய, ...
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்று (07) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ...
இலங்கை ஆதிவாசிகளின் தற்போதய தலைவராக கருத்தப்படும் வன்னில எத்தோ (வயது-62) நேற்று மரணமடைந்தார். தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ என்ற இயற் பெயரை கொண்ட அவர், பொதுவாக வன்னில எத்தோ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட வேடுவத்தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார். காசநோயின் ...
இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிக பணம், இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்தினம் (06) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் கிடைத்த தகவல்களின் ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க ...
போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு நேற்று முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜையிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 280 கிராம் 150 மில்லி கிராம் ...
கிழக்கு மாகாண நில உரிமை மற்றும் மனித உரிமை விவகாரங்கள் நேற்று (06), இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகரை, கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினர் திருகோணமலை Trinco Blu Hotel இல் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில், கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்புடன் இணைந்து ...
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள சி. ஜோசப் விஜய் என்கிற ‘தளபதி விஜய்’க்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நேற்று (06) அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்தில், நடந்து முடிந்த தேர்தலில் அவர் ஒரு சிறப்பான ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 40 கோடி ரூபாய் பெறுமதியான வீடு என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்து, அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி ...