மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று (09) மாலை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திரவிழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குள் நடைபெற்ற இந்திரவிழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ...
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, மே மாதம் 11 ஆம் திகதியளவில் அது ஒரு குறைந்த தாழமுக்கமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என ...
ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் பழங்குடியின கிராமத்தின் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் காலமான பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோவின் புதல்வர் ஆவார். மறைந்த தலைவர் சுதா வன்னில எத்தோ பயன்படுத்திய வில் ...
நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்து என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (09) இரவு 11.30 மணி வரை இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய ...
2026 ஆம் ஆண்டிற்கான விசேட மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (09) அறிவித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதம் வரை ...
2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 மார்ச் மாத இறுதியில் 7,026 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் ...
திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில இன்று (09) காலை குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர், குறித்த மரணம் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் ...
அக்கரையங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2026.05.07 அன்று ஜெயப்புரம் பொலிஸ் நிலையத்தில் ஹலோ டிரஸ்ட் (HALO Trust) கண்ணிவெடி அகற்றும் நிறுவன அதிகாரிகளால் இது குறித்த முதற்கட்டத் தகவல் வழங்கப்பட்டது. இருப்பினும், குறிப்பிட்ட பகுதி ...
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று அம்பலங்கொடை பகுதியில் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் 47 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். ...