கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நேற்றிரவு ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. கடுமையான காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் யாழ்.அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற மத ஆராதனையில் ...
சமயங்களை விமர்சிப்பதை தவிர்த்து உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தனை செய்யங்கள் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் . ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் அமைதி ...
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 14 நாட்களுக்குள், 11,019 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். இவர்களிடமிருந்து 2,727 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் ...
இதுவரை எடுக்காத ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகள் அனைத்தும் எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இன்று வழங்கப்படவிருந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளே நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளி பயணித்த வாடகை வாகனத்துக்கு பிரதேசவாசிகள் இணைந்து தீ வைத்துள்ளனர். கண்டி அக்குரணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு வந்த வாகனத்தை கம்பளை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினர், கம்பளை சிங்கப்பிட்டி பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இதன் பின்னர் இந்த ...
கொரோனா வைரஸால் நயினாதீவைச் சேர்ந்த ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். இதல் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கைச் சேர்ந்த குகதாசன் விஜயானந் (வயது-47) என்பவரே கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
நேத்ரா வீ.V அலைவரிசை ஊடாக தரம் 6-11 வரையான மாணவர்களுக்கான பாடங்கள் தமிழ் மொழிமூலம் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கமைவாக நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 20ஆம் திகதி தொடக்கம் தரம் 6-11 ...
வட இலங்கைச் சங்கீத சபையினால் நடத்தப்படுகின்ற சகல பரீட்சைகள் மற்றும் கருத்தரங்குள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, வட இலங்கைச் சங்கீத சபையினால் 2020 மே, யூன் மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சகல தரங்களுக்குமான சகல பரீட்சைகளும் தரம் 5 ...
அச்சுவேலியைப் பிறப்பிட மாகவும் பிரான்ஸில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவர் கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் நேற்று சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள் வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கு அத்தியாவசிய சேவைகள், உணவுப் பொருள்கள், மருந்துப் ...