மே மாதத்தில் மட்டும் 145,745 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 132,919 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும்போது 9.65% வளர்ச்சியாகும். மேலும், 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் ...
இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட 30 இந்திய மீனவர்கள் நேற்று (02) சென்னையை சென்றடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ...
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றயதினம் 14 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இன்றுடன் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 266 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ...
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண ...
சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 13 சீன பிரஜைகளை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் ஏர் ஆசியா மற்றும் பத்திக் ஏர் விமான சேவைகள் மூலம் குறித்த சீன பிரஜைகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக ...
ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி ...
தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இந்த நெருக்கடி நிலையான ...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான, வழக்கின் விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக வழக்கு ...
இன்று முதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 5% இனால் அதிகரிப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி மேலும் 5 காடுகள் வர்த்தமானி மூலம் பாதுகாக்கப்பட்ட காடுகளாக பிரகடனப்படுத்தப்படவுள்ளன. இதற்கமைய மொத்த பாதுகாக்கப்பட்ட காடுகளின் எண்ணிக்கை 86 ஆக ...