தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 15
நாஸ்திகம் என்பது கடவுள் இல்லை எனும் கொள்கையைக் குறிப்பதாகும்.
ஈ.வே.ரா.பெரியார், அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் நாஸ்திகவாதிகள். அவர்கள் கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்.
இதில் ஈ.வே.ரா பெரியார் கடவுள் மறுப்புக் கோட்பாட்டைக் கொண்டவர். நாஸ்திகம் என்பதற்கும் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதற்கும் ஏதேனும் வித்தியாசம்-வேறுபாடு உண்டா? என நீங்கள் யாரேனும் கேட்கலாம்.
இங்குதான் நாஸ்திகம் என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டதாயினும் கடவுள் நம்பிக்கையுடைய ஆஸ்திக வாதிகளை இவர்கள் எதிர்ப் பதில்லை.
அதாவது கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை கொண்டவர்களை எதிர்ப்பதும் அவர்களைத் தவிர்ப்பதும் நாஸ்திகத்திற்கு உடன்பாடன்று.
அந்த வகையில் கலைஞர் கருணாநிதி நாஸ்திகப் போக்கைக் கொண்டிருந்தார்.
கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந் உரையாற்றும் போது, சிலருக்கு கடவுளில் விருப்பமில்லை. ஆனால் கடவுளுக்கு அவர்கள் மேல் விருப்பம் என்று கூற, அதனை அங்கீகரிப்பது போல, கலைஞர் கருணாநிதி சிரித்து மகிழ்ந்தார்.
ஆனால் பகுத்தறிவின் தந்தை ஈ.வே.ரா.பெரியார் நாஸ்திகம் என்பதைக் கடந்து, கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்ததன் காரணமாக தமிழகம் முழுமை யிலும் கடவுள் கோட்பாட்டிற்கும் ஆலய வழிபாடுகளுக்கும் எதிராகப் பிரசாரம் செய்தார்.
இங்கு பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாயினும் அவரின் கடவுள் மறுப்புப் போக்கை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்து ஆலயங்களும் அவற்றின் நிர்வாகங்களும் என்பதான இத் தரிசனம், எங்கள் ஈழ மண்ணில் இருக்கக்கூடிய இந்து ஆலயங்கள் மற்றும் அவற்றின் நிர்வாகங்கள் பற்றிச் சிலாகிப்பதை நோக்கமாகக் கொண்டது.
எனினும் எமது அண்டை நாடாகவும் ஞானபூமியாகவும் இருக்கக்கூடிய இந்திய தேசத் தில் குறிப்பாக தமிழகத்தில், இந்து சமயத்திற்கான அங்கீகாரம் குறித்து சில விடயங் களை முன்வைப்பது அவசியம் என்ற அடிப்படையிலேயே அவை பற்றி இவ்விடத்தில் பிரஸ்தாபிக்கின்றோம்.
இங்குதான் தமிழகத்தில் ஆட்சி செய்த மு.க.ஸ்ராலினை முதலமைச்சராகக் கொண்ட திமுக இந்து சமயத்திற்கு எதிராகச் செயற்பட்டது என்ற உண்மையை இங்கு கூறியாக வேண்டும்.
அதுதவிர, மு.க.ஸ்ராலின் அவரது மகன் உதயநிதி ஸ்ராலின் ஆகிய இருவரும் நாஸ் திகம் என்பதை வகைப்படுத்துகின்றனர்.
அதாவது, அவர்களைப் பொறுத்தவரை இந்து சமயத்தில் கடவுள் இல்லை என்பது தான் அவர்களின் நாஸ்திகம். இதை இன்னும் தெளிவுபடுத்துவதாயின்,
கத்தோலிக்கம், இஸ்லாம் ஆகிய மதங்கள் கூறுகின்ற இறை கொள்கையை மு.க.ஸ்ராலினும் உதயநிதி ஸ்ராலினும் ஏற்றுக் கொள்கின்றனர். அதனாலே உதயநிதி ஸ்ராலின் தன்னை ஓர் கத்தோலிக்கராக அறிவித்தார்.
ஆம், நாஸ்திகம் என்பது கடவுள் இல்லை என்பது மட்டுமல்ல. நாஸ்திகர்களுக்கு மதங் களும் இருக்க முடியாது.
ஆக, நான் ஒரு கத்தோலிக்கன் எனக் கூறிய உதயநிதி ஸ்ராலின் இந்துமத எதிர்ப்பா ளரேயன்றி, அவர் நாஸ்திகர் அல்ல என்பது நிரூபணமாகிறது.
இங்குதான் தமிழக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்குச் சமாதி கட்ட வேண்டும் என சபதம் எடுத்துக் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதனை நிறைவேற்றிக் கொண்டனர்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம்
திராவிட முன்னேற்றக் கழகத்தை முறியடித்து ஆட்சியைக் கைப்பற்றுகின்ற திறன் அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சிகளிடமும் இருக்கவி ல்லை. அந்தளவுக்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கடும் பலவீனமுற்றிருந்தன.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தை நடிகர் விஜய் ஆரம்பிக்கின்றார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த போது அதற்கு எதிராக எழுந்த பிரசாரம் சாதாரணமானதன்று.
அந்தப் பிரசாரங்களில் ஒன்றாக விஜய் என்ற பெயருக்கு முன்பாக ஜோசப் என்ற பெயர் சேர்க்கப்படுகிறது.
ஆம், திரையுலகில் தளபதி என அறியப்பட்ட நடிகர் விஜய் ஓர் இந்து என்றே பலரும் கருதியிருந்தனர்.
தந்தை சந்திரசேகர், தாய் சோபா, மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் என்ற பெயர் ப்பட்டியல் நடிகர் விஜயை இந்துவாகவே காட்டி நிற்கிறது.
தவிர, அவர் நடித்த திரைப்படங்கள் எதிலும் ஜோசப் என்ற பெயருக்கு இடமிருக்கவில்லை.
தொடரும்…


