தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 14
தமிழகத்து சட்ட சபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநெறித்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு-திமுகவின் முக்கிய புள்ளிகளான பொன்முடி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா போன்றவர்களே காரணம் என்பதை தமிழகத்தின் மேன்மைமிகு அரசியல் ஆய்வாளர்கள் பகிரங்கமாகக் கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் முன்வைத்த பெயர் பட்டியலானது எந்த அடிப்படையில் என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம்.
இங்குதான் இந்து சமயத்தை நிந்தை செய்ததன் அடிப்படையிலேயே மேற் குறித்தவர்களின் பெயர்கள் குறித்துரைக்கப்பட்டு, அவர்களின் சனாதனதர்ம விரோதப் போக்கே திமுகவின் தோல்விக்குக் காரணம் என எழுத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் திமுகவின் ஆட் சியில் அறநெறித்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு ஒரு கிறிஸ்தவர் என்பதை அருட்திரு சாமுவேல் அடிகளார் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
இதேபோல் சனாதன தர்மத்தை ஒழிப்பதுதான் எங்களின் இலக்கு எனக் கூறிய உதயநிதி ஸ்ராலினே திமுகவின் கோடலிக் காம்பாயினார்.
இப்போதும் அவர் சட்ட சபையில் உரையாற்றும் போதும், ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் போதும் சனாதன தர்மத்தை ஒழிப்போம் எனக் கூறுகின்றார்.
இஃது, தான் கூறியது தவறன்று என்பதை தெரிவிக்கும் வகையில் மீளக் மீளக் கூறுகின்ற உளவியல் நோயின் பாற்பட்டதாகும்.
ஆயினும் இதுவே திமுகவின் அரசியல் அந்திமம் என்பதை உதயநிதியினாலோ அன்றி திமுகவின் தலைவர் மு.க.ஸ்ராலினாலோ புரிய முடியாமல் போயிற்று.
இதனையே ஊழ்வினை என ஞானிகள் உரைத்து நிற்பர்.
திமுகவின் 2 ஆம் தர நிலையினர்
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்ராலின் கூற, வழமையாகக் கைதட்டி தங்களின் விசுவாசத்தைத் தெரிவிக்கின்ற திமுகவின் பிரமுகர்கள் சனாதன தர்மம் எனப் போற்றப்படும் இந்து சமயத்தை ஒழிப்போம் என உதயநிதி கூறுவதை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டனர்.
உண்மையில் திமுகவின் எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கூடிய தலைவர்கள் யாரேனும் அந்தக் கட்சியில் இருந்திருப்பார்களாயின், அவர்கள் உதயநிதி ஸ்ராலினிடம் சனாதன தர்மத்தை அவ்வாறு கூறாதீர்கள் – அவ்வாறு நீங்கள் கூறுவதாயின், அது சனாதன தர்மத்தயன்று. மாறாக அது திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பதாகவே பொருள்படும் என எடுத்துரைத்திருப்பர்.
என்ன செய்வது குடும்ப ஆட்சி ஒருபுறம் இருக்க, சட்ட சபையில் ஜெயலலிதாவின் துகிலுரிந்த துறைமுருகன் போன்ற மூத்தவர்கள் திமுகவின் பேரில் திராவிட, தமிழகத்தின் ஒரு பெரும் ஆட்சி, தமிழக வெற்றிக் கழகம் எனும் ஒரு புதிய கட்சியின் புதுமுக நுழைவோடு ஆட்டம் காணலாயிற்று.
இங்கு தான் தி.மு.கவின் வீழ்ச்சிக்கு தி.மு.கவின் இரண்டாம் தரப்பில் இருக்கக்கூடிய நடிகர் கமலஹாசன், பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி போன்றவர்கள் பெரும் பங்காற்றுகின்றனர்.
உண்மை பிராமணக் குலத்தைச் சார்ந்த நடிகர் கமலஹாசன் நடிப்பு என் பதைத் தவிர வேறு எந்த வகையிலும் தனது நற் சான்றிதழை நிரூபிக்க முடியாத ஒருவர்.
அவரின் தகிடு தத்தம் நடிப்பு என்ற எல்லையோடு இருந்தவரை மெளனித்திருந்தது.
ஆனால் அன்று அரசியலில் இறங்கி தோல்வியைச் சந்தித்த பின்னர் தி.மு.கவிடம் சரணாகதியடைந்து மக்களவை உறுப்பினராகிய போது உலக நாயகன் கமலஹாசன் என்பது உலகமகா நடிகன் கமலஹாசன் என்றாயிற்று.
அவர் அரசியலுக்கு வர முன்னதாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கடவுள் இருக்கிறரா? எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கடவுள் இருக்கிறரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கடவுள் இருந்தால் நல்லது எனக் கூறியவர் ஏழைக் குழந்தைகள் கடவுளின் பிள்ளைகள் என்றால் கடவுளுக் கல்லலா குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
அதே கமலஹாசன் தி.மு.கவின் தலைவர் மக்களவை உறுப்பினராகிய போது சேகர் பாபுவுக்காக தேர்தல் பிரசாரம் செய்தார்.
அதில் இராஜராஜ சோழனை விட அதிக இந்து ஆலயங்களுக்குக் குடமுழுக்குச் செய்தவர் இந்து அறநெறித்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு என மாமன்னன் இராஜ ராஜ சோழன் … திருச்செந்தூர் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுத்த சேகர்பாபுவை ஒப்பிட்டு தன்னை ஒரு நிகழ்நிலை மனிதனாக அடையாளப்படுத்திக் கொண்டார்.
தொடரும்…


