ஊழல் ஒழிப்பு உறுதி செய்யப்பட வேண்டும்
Share
எதிர்க்கட்சியாய் இருந்தால் ஆளும் கட் சியை எதிர்க்க வேண்டும். விமர்சிக்க வேண்டும்.
அவர்கள் ஊழல்வாதிகள் எனப் பேச வேண்டும். அதை நிரூபிப்பதால் நாலு விடயங்களை எடுத்து விட வேண்டும். இவற்றைக் கடந்து எதிர்கட்சிக்கு மிக முக்கியமானது ஆளும்கட்சியின் பலத்தை இல்லாதொழித்து அதைப் பலமிழக்கச் செய்து தாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கான அத்தனை காய் நகர்த்தல்களையும் மேற்கொள்ள வேண்டும்
இலங்கை வரலாற்றில் ஒரு இடதுசாரிக்கட்சி ஆட்சியமைத்தது இதுவே முதன்முறையாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசு தனது நெடும் பயணத்தில் இந்த மைல்கல்லை அடைந்திருக்கிறது என்றே குறிப்பிட வேண்டும்.
பெரும்பான்மை சிங்கள மக்கள் தமக்குப் பிடிக்கவில்லை எனின் எவராயினும் தூக்கி எறிந்து விடுவார்கள்.
இதற்கு பல உதாரணங்கள் உண்டாயினும் போர் வீரன், வெற்றி நாயகன் என சிங்கள மக்களால் போற்றப்பட்ட மகிந்த ராஜபக்ஷவைத் தூக்கி எறிந்தமை இதற்குத் தகுந்த உதாரண மாகிறது.
தேர்தல் களத்தில் தேசிய மக்கள் சக்தி கொடுத்த வாக்குறுதிகள் மிகப் பெரியவை.
அரசியல் களத்தில் எவரும் உரைக்காத பல வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி கொடுத்தது.
இதில் மிக முக்கியமானது ஊழல் ஒழிப்பு மற்றும் ஊழல்வாதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பன.
இலங்கைத் திருநாட்டின் இந்த வங்குரோத்து நிலைக்கு ஏலவே இருந்த ஊழல் நிறைந்த ஆட்சியே காரணம் என்பதை சிங்கள மக்கள் நன்குணர்ந்தனர்.
நாட்டைச் சீரழிக்கும் ஊழலை ஒழிக்கவும் நாட்டைச் சீரழித்த ஊழல் வாதிகளைப் பிடித்து சிறையில் அடை க்கவும் நாம் தயார் என்றது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி.
ஒட்டுமொத்த சிங்கள தேசமும் ஒன்றிணைந்து அநுர கரங்களை பலப்படுத்தியது. அநுர அரசும் மலர்ந்தது.
அநுர அரசு ஆட்சிபீடமேறிய கையோடு பல அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியது.
இதில் அரச சொத்துக்களைத் துஸ்பிரயோகம் செய்தவர்கள் தொடர்பான விசாரணைகள் முக்கியத்துவம் பெற்றன.
அத்துடன் போதைவஸ்துடன் தொடர்புடையவர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேட்டையாடினர்.
போதைப்பொருள் விற்பனைக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் மிக விரைவில் அது தொடர்பான அறிவித்தல்கள் வெளிவரும். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றனர்.
இதைத்தான் ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்தனர். இப்படிப்பட்ட ஆட்சியே எமக்குத்தேவை என இலங்கை மக்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.
ஆயினும் முன்பிருந்த வேகம் அரசிடம் தற்போது இருக்கவில்லை என்பது மறக்க முடியாத உண்மை.
அநுர அரசை எவ்வாறு வீழ்த்தலாம் என அறைகளிலிருந்து ஆலோசனை நடத்திய எதிர்கட்சிக்கு இரண்டு விடயங்கள் கிடைத்திருக்கின்றன.
ஒன்று தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பானது மற்றையது திறைசேரியிலிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான விடயம்.
இவை இரண்டும் சாதாரணமான விடயமல்ல. நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் தள்ளக்கூடிய விடயமே.
இந்த நிலையில் எரிசக்தி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதிலும் அது தோற்கடிக்கப்பட்டது.
ஆயினும் எரிசக்தி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் உடனடியாகத் தமது பதவிகளை துறந்தவுடன் தமது சொத்து விபரங்களையும் வெளியிட்டிருந்தனர்.
இது அரசை ஆட்டம் காணவைத்த செயலாகினும் எரிசக்தி அமைச்சர் பதவி விலகியதனூடே அரசுக்கு இருக்கும் அழுத்தம் சற்றுக் குறைந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் அதன் அறிக்கை வெளிவரும் என்கிறது அரசு.
ஆயினும் எதிர்க்கட்சிகளோ நிலக்கரி ஊழல் நட்டத்தை பொதுமக்க ளின் தலையில் கட்டி ஊழலை மறைக்க முனைகிறது அரசு எனக் குற்றம் சாட்டியுள்ளது.
திறைசேரியிலிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான விடயம் தொடர்பில் ஒட்டுமொத்த நாடும் திகைத்திருக்கும் நிலை
யில் இவ்விடயத்துடன் தொடர் புபட்ட நான்கு அதிகாரிகள் பணி
யிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் மீது விசார
ணைகளையும் முடுக்கி விட்டது அரசு.
இதில் ஒரு அதிகாரி மர்மமான முறையில் மரணமடைந் திருப்பது மேலும் பல கேள்வி களை எழுப்பி நிற்கிறது.
இந்த நிலையில் ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் அரசியல் பழிவாங்கலைச் செய்யும் அரசு இப்போது ஊழல் செய்கிறது என்கிறது மகிந்த தரப்பு.
எப்படியாவது நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவர்களை தூங்கக் கூட விட வில்லை என்பது அவர்களின் பேச்சுக்களில் புரிகிறது.
மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது பங்கிற்கு அரசை எச்சரித்துக் கொண் டிருக்கிறார்.
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திப் பாருங்கள். அப்போது உங்கள் பலவீனமும் எம் பலமும் புரியும் என மே தின உரையில் சூளுரைத்திருக்கிறார் அவர்.
நிலை இவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மே தின உரை பலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும்.
ஆம், தேசிய மக்கள் சக்தி அரசின் மேதினம் நுவரேலியாவில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, “இவ் வருட இறுதிக்குள் முக்கியமான புள்ளிகள் பலர் சிறையில் அடை க்கப்படுவர்.
எந்தவொரு தராதரமும் பராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
கடந்த கால ஊழல்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் என்பன தொடர்பில் விசாரணைகள் நடந்து வரும் நிலையில் ஜனாதிபதியின் குறித்த பேச்சு பலருக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கும்.
எது எவ்வாறோ நிலக்கரி ஊழல் மற்றும் திறைசேரி பணம் காணாமல்போன விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு,
மக்களுக்கு அது தொடர்பான தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள அரசு தீவிரம் காட்ட வேண்டும்.
இல்லையேல் ஊழல் ஒழி ப்பு தொடர்பில் அரசு மீது வைத்திருக்கும் மக்கள் நம்பிக்கை உடைந்து போகும்.
அபிமன்யு.


