Type to search

Headlines Local News News

நெடுஞ்சாலைகளில் ஜூன் 20 முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்

Share

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. 

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். 

வாகனங்களின் முன்பக்கத்தில் மாத்திரமன்றி, பின்பக்க ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சலுகைக்காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்தச் சலுகைக்காலம் எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 

இதற்கமைய, ஜூன் மாதம் 20ஆம் திகதி முதல் இந்தச் சட்டம் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link