Type to search

Headlines News Sports

ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026: சமநிலையில் முடிந்த கட்டார் மற்றும் சுவிட்சர்லாந்து ஆட்டம்!

Share

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டுப் பொறுப்பில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குழுநிலைப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி, குழு ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற கட்டார் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.


போட்டியின் ஆரம்பம் முதலே சுவிட்சர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி  வாய்ப்பை பயன்படுத்தி, அந்த அணியின் நட்சத்திர வீரர்  Breel Embolo அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.


அதன் பின், ஆட்டம் சுவிட்சர்லாந்தின் வசமே இருந்தது. ஆனால், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+4′ நிமிடத்தில்) சுவிட்சர்லாந்து அணியின் Miro Muheim எதிர்பாராதவிதமாக அடித்த சுயகோல்  கட்டார் அணிக்கு சாதகமாக அமைந்தது. இதன் மூலம் கட்டார் அணி அதிர்ஷ்டவசமாக போட்டியை 1-1 என சமன் செய்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link