சஹாரா பாலைவனத்தில் பலியான 49 பேர்
Share
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் 49 பேர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மாலி இராச்சியத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ட்ரக் வண்டியொன்றில் வீடு திரும்பியுள்ளனர்.
நைகரின் வடக்கு பகுதியிலுள்ள சஹாரா பாலைவனம் ஊடாக ட்ரக் பயணித்த போது வண்டியில் இயந்திர கோளாறு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே சிக்குண்ட தரப்பினர் கடும் வெப்பம் காரணமாக நீர் மற்றும் உணவின்றி தவித்துள்ளனர்.
நைகர் மற்றும் அல்ஜீரியாவிற்கிடையேயான பிரதான எல்லையை கடக்கும் இடமான அஸ்ஸாமாவிற்கு மேற்கில் 80 கிலோ மீற்றர் தொலைவில் ட்ரக் வண்டி விபத்துக்குள்ளானது. அவர்களிடமிருந்த உணவு மற்றும் தண்ணீர் தீர்ந்ததால் தாகம் மற்றும் பசியால் வாடியுள்ளனர்.
இதனால் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் ட்ரக் வண்டியில் பயணித்த இருவர் மாத்திரம் பல மைல் தூரம் நடந்து சென்று ஒரு நீர்நிலையை அடைந்துள்ளனர்.


