Type to search

Headlines Local News News

புத்தளத்தில் நீரில் மூழ்கி மூவர் பலி

Share

நுரைச்சோலை, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


நேற்று (06) மாலை 5:30 மணியளவில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link