Type to search

Headlines Local News News

கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்!

Share

காலி – ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பே கடற்கரைப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று காணாமல் போயுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளவர் குருணாகல் – மல்லவபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காணாமல் போன இளைஞர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கடலில் நீராடிக்கொண்டிருந்த போது அவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.

காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகளும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் ஹபராதுவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link