Type to search

Headlines Local News News

சீரற்ற வானிலையால் 27,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Share

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

அந்த நிலையம் நேற்று (23) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 6,907 குடும்பங்களைச் சேர்ந்த 27,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் 6 மாவட்டங்களில் உள்ள 34 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. 

மேலும், 2 வீடுகள் முழுமையாகவும், 807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link