Type to search

Headlines Local News News

வவுனியா களுகுன்னாமடு அலகல்ல வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு !

Share

வவுனியா, களுகுன்னாமடு அலகல்ல வீதியானது காப்பற்ற இடப்பட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 42 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ்வீதி திறப்பு விழாவில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்ரத்நாய, கூட்டுறவு பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தவிசாளர் சுதர்சன வீரகோன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் ஜொய்ஸ்குரூஸ், மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த வீதியினை 11 கிராமங்களை சேர்ந்த  மக்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link