இலங்கையின் ரப்பர் துறையை மேம்படுத்த 41 புதிய அதிகாரிகள் நியமனம்!
Share
இலங்கையின் ரப்பர் பயிர்ச்செய்கைத் துறையை திறன்மிக்க மற்றும் தரமான நிலைக்கு உயர்த்தும் நோக்கில், ரப்பர் அபிவிருத்தி திணைக்களத்திற்கு 41 புதிய ரப்பர் அபிவிருத்தி அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்த புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று (18) பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் ரப்பர் உற்பத்தித் துறையை நவீனமயமாக்கவும், அதன் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தவும் இந்த புதிய நியமனங்கள் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக நியமனம் பெறும் அதிகாரிகள் அனைவரும் ரப்பர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளுக்காக விரைவில் அணுசரணை வழங்கவுள்ளனர்.


