Type to search

Articles விகடன் பிளஸ்

ஜோசப் விஜய் எனும் நான்…

Share

‘ஜோசப் விஜய். எனும் நான்…’ என்று நேரு உள்விளையாட்டு அரங்கமே அதிர, தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் விஜய். பல அலைக்கழிப்புகளுக்குப் பின்னர் நடந்த ஆளுநரின் அழைப்பு, பதவியேற்பு, விஜய்யின் முதல் கையெழுத்து என ஏக குஷியில் இருக்கிறது த.வெ.க முகாம். ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரைச் சந்திக்க விஜய் படையெடுத்த முயற்சிக

ளைக் கடந்த சில நாட்களாக ஃபாலோ செய்ததில் களத்தில் பார்த்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இங்கே!

தேர்தல் முடிவுகள் வந்த அன்றிரவே தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விஜய்க்கு ஆதரவு தருவ தாக உறுதி கொடுத்தது. மறுநாள் மே 5ஆம் திகதி பனையூருக்கு, தமி ழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழகக் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் சென்று ஆதரவுக் கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய படலம் மூன்று நாட்களாகத் தொடர்ந்தது.

அதிலும் நான்காவது முறை விஜய் ஆளுநரைச் சந்திப்பதற்குள் அத்தனை ட்விஸ்ட்டுகள் நடந்து விட்டன.

யூ-டர்ன் அடித்த விஜய்யின் கார்!

காரணம், ஆட்சியமைக்கத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் காட்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

தி.மு.க கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளைத் தொடர்ந்து வி.சி.கவும் ஐ.யூ.எம்.எல்லும் பலவித இழுத்தடிப்புகளுக்குப் பிறகே த.வெகவை ஆதரிக்கத் தயாராகின விஜய்யும் கொஞ்சம் குஷியாகி ஆளுநர் கேட்ட எண்ணிக்கையைக் காட்டி

லும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகமாகவே, அதாவது 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களுடன் கிண்டிக்கு உற்சாகமாக வண்டியைக் கிளப்பினார்.

இந்த நிலையில், திடீரென ஆளுநர் கேரளாவுக்குக் கிளம்புகிறார். சந்திப்புக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வரவே, அடையாறு மேம்பாலம் வரை வந்த விஜய்யின் கார், யூ-டர்ன் அடித்து மீண்டும் பட்டினப்பாக்கத்துக்கே திரும்பியது.

இதனால் த.வெ.க தொண்டர்கள் சோர்வடைந்துபோக, அடுத்த அரை மணி நேரத்தில் ஆளுநரிடமிருந்து அனுமதி கிடைத்தது.

ஆனாலும் ஆளுநர் ஏதாவது உட்குத்து வேலையில் ஈடுபடுவார் என யூகித்து நான்காவது முறை ஆதரவுக் கட்சித் தலைவர்களுடன் சென்றிருந்தார் விஜய்.

ஆளுநரைச் சந்தித்த கையோடு ஒரு மணி நேரம் அங்கேயே உட்கார்ந்து ஆட்சியமைப் பதற்கான அழைப்பையும் வாங்கி வந்தார்.

காத்திருந்த இந்த வேளையில், ஆதரவுக் கட்சித் தலைவர்கள் விஜய்யிடம் அரசியலைத் தாண்டி மனம்விட்டுப் பேசியதாகத் தெரிகிறது. சிலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களையும் போனில் அழைத்து விஜய்யிடம் பேச வைத்திருக்கின்றனர்.

13 மணி நேரத்தில் பம்பரமாகச் சுழன்ற அரசு இயந்திரம்!

ஆளுநர் மாளிகையிலிருந்து கிளம்பும்போது அண்ணாசாலையின் இருபக்கமும் திரண்டிருந்த த.வெ.க தொண்டர்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க போன்ற ஆதரவுக் கட்சித் தலைவர்களின் கார்களுக்கும் மலர் தூவி ஆர்ப்பரிக்க, அந்தத் தலைவர்களும் மக்களின் அன்பில் திக்குமுக்காடிப்போனார்கள்.

மே 9ஆம் திகதி இரவு 8 மணிக்கு மேல்தான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

விஜய் தரப்பு மறுநாள் மாலை 3 மணிக்கே ஆட்சியமைக்க விரும்பி ஆளுநரின் நேரத்தைக் கேட்டிருந்தது.

ஆனால், ஆளுநர் மதியம் பிஸி எனக்கூற, காலை 10 மணியென மாற்றப்பட்டிருக்கிறது.

பதவியேற்பு நிகழ்வுக்கான அவகாசம் 13 மணி நேரம் மட்டுமே இருக்க, மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை, பொலிஸ்துறை, போக்குவரத்துத்துறை என அரசு இயந்திரம் மொத்தமும் பம்பரமாக சுற்றிச் சுழன்று விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்திருக்கிறது.

‘தலைவரே, கையெழுத்து போட்டுடட்டுமா?’

பதவியேற்கையில் உறுதிமொழியை மனப்பாடமாக வைத்திருந்த விஜய், பெரும் உற்சாகத்தோடு கர்ஜிக்கும் தொனியில் வசனமாகப் பேசினார். ஆளுநர் கொஞ்சம் ஜெர்க் ஆகி விஜய்யிடம் பேப்பரைக் காட்டி, ‘இதில் இருப்பதைப் படியுங்கள்’ என்றார். ‘அதைத்தான் படிக்கிறேன்’ என்று விஜய் கூறி, தொண்டர்களின் ஆர்ப்பரிப்பைத் தாண்டி மேலும் கர்ஜித்தார்.

ஆனந்த் பதவியேற்கையில் பதவிப் பிரமாணத்தில் கையெழுத்தி டும்போது, ‘தலைவரே, கையெழுத்து போட்டுடட்டுமா…’ என விஜய்யைப் பார்த்துக் கேட்க, அரங்கமே அதிர்ந்தது.

விஜய்யும் மென் சிரிப்புடன் தலையை ஆட்டி, ‘போடுங்க…’ என்ற பிறகுதான் ஆனந்த் கையெழுத்தே போட்டார். அதேபோல் ராஜ் மோகன் பதவியேற்கையில் ‘ஆண்டவன் மீது ஆணையாக…’ எனும்போது டைமிங்கில் விஜய்யைத் திரும்பிப் பார்க்க, மீண்டும் அரங்கம் அதிர்ந்தது.

விஜய்யின் பேச்சை ராகுல் காந்திக்கு ஆனந்த் விளக்கினார்.

புதிய கலாசாரத்தை உருவாக்கிய விஜய்!

போட்டோ ஸுட்டுக்கு மேடையைக்ளீன் செய்கையில் ஊழியர்களுடன் முதல்வர் விஜய்யும் டேபிளைக் கைப்பிடித்துத் தூக்கியது என சின்னச் சின்னதாக நிறைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கியிருந்

தது பதவியேற்பு விழா.

எல்லாவற்றையும்விட ஹைலைட் விஜய்யின் காஸ்ட்யூம்தான். பிளாக் அண்ட் வைட் கோட் சூட்டில் தமி ழக அரசியலுக்குப் புதிய உடை கலாசாரத்தை அறிமுகப்படுத்தி வைத் திருக்கிறார் விஜய்.

அரசியல்வாதிகள் என்றாலே கரை வேட்டி, சட்டை என்கிற இமேஜ்தான் கண் முன் தோன்றும். அதை விஜய் உடைத்துப் புதிய கலாசாரத்துக்கு வித்திட்டிருக்கிறார்.

பதவியேற்ற மறுநாள் மே 11ஆம் திகதி சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடந்திருக்கிறது.

சட்டமன்றம் முழுக்கப் புதுமுகங்களாகவே தென்பட்டன. ‘Power shift’இன் தன்மையையும் உணர முடிந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்புவரை அமைச்சர்களுக்கான பார்க்கிங்கில் நிழலில் நின்று வந்த உதயநிதியின் கார், அன்று சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லும் வழியான ‘நுழைவு வாயில் 4’இற்கு வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தது.

சான்றிதழ் இல்லாமல் வந்த சட்டமன்ற உறுப்பினர்கள்!

முதன்முறை என்பதால் த.வெ.கவைச் சேர்ந்த சிவகாசி கீர்த்தனா, சேலம் பார்த்திபன், சோழிங்கநல்லூர் ஈ.சி.ஆர்.சரவணன், பல்லாவ ரம் காமாட்சி எனப் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வெற்றிச் சான்றிதழை எடுத்து வரவில்லை.

அதேபோல் அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலருமே இந்தத் தவறைச் செய்திருந்தனர்.

முதலில் அமைதியாக இருந்த முதல்வர் விஜய், ஒரு கட்டத்தில் சான்றிதழ் கொண்டுவராத தன் கட்சியினர்மீது சற்று கோபப்பார்வையை வீசினார்.

தமிழக அரசியலின் கலரே மாறத் தொடங்கியிருக்கிறது.

புதிய அரசியலர்கள், புதிய பாணி, புதிய சவால்கள் என எல்லாமே புதுமையாக இருக்கின்றன.

விஜய்யின் கோட், சூட் அரசியல் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link