Type to search

Headlines Local News News

சுன்னாகம் – புத்தூர் வீதிக்கு பூட்டு!

Share

யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ அறிவித்துள்ளார்.

சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவை அவசரமாக மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த ரயில்வே கடவை இன்று காலை 7.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் போக்குவரத்துக்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link