அரச பல்கலைக்கழகங்களுக்கு புதிய ‘AI கொள்கை கட்டமைப்பு!
Share
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை வெறும் பயன்பாட்டுடன் மட்டும் சுருக்கிக்கொள்ளாமல், கொள்கைகள், ஒழுக்கநெறிகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாக முறைமையின் ஊடாக அதன் எதிர்காலத்தை வடிவமைக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரச பல்கலைக்கழகங்களுக்கான ‘AI கொள்கை கட்டமைப்பை’ (AI Policy Framework) அறிமுகப்படுத்தும் நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இலங்கை பல்கலைக்கழக முறைமைக்குள் செயற்கை நுண்ணறிவை தார்மீக ரீதியாகவும், பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், வேகமாக மாறிவரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவுக்குள் வாய்ப்புகளும் அதேநேரம் சவால்களும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


