Type to search

Headlines Local News News

விசேட சுற்றிவளைப்பு: ஒரே நாளில் 625 பேர் கைது!

Share

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (07) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 625 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது 28,061 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 255 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 155 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 71 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 52 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,252 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link