Type to search

Headlines News World News

ஜேர்மனிலிருந்து 5 ஆயிரம் இராணுவ வீரர்களை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா

Share

ஜேர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைத்தளங்களில் இருந்து சுமார் 5,000 இராணுவ வீரர்களை திரும்பப் பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவுக்கு இராணுவத் தளங்கள் காணப்படுவதுடன், நேட்டோ (NATO) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் மற்றும் நட்பு நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், ஜேர்மனியில் உள்ள அமெரிக்க படைத்தளங்களில் தற்போது சுமார் 36,000 அமெரிக்க பாதுகாப்புப் படையினர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஜேர்மனி இடையே அண்மையில் கருத்து முரண்பாடுகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, ஈரானுக்கு எதிரான போர் தொடர்பில் அமெரிக்கா அவமானமடைந்துள்ளதாக ஜேர்மனியின் சான்சிலர் பிரைட்ரிச் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிறிய பதற்ற நிலை உருவாகியுள்ளது.இந்த பின்னணியில், ஜேர்மனியில் இருந்து 5,000 அமெரிக்க இராணுவ வீரர்களை அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் கட்டம்கட்டமாக திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை, ஐரோப்பிய பாதுகாப்பு சூழ்நிலைக்கும், நேட்டோ கூட்டணியின் செயல்திறனுக்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து சர்வதேச ரீதியில் கவனம் செலுத்தப்படுகிறது.எனினும், அமெரிக்கா தனது கூட்டணி உறவுகளை தொடர்ந்து பேணும் என்றும், பாதுகாப்பு ஒத்துழைப்பில் மாற்றம் இருக்காது என்றும் சர்வதேச ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link