வருட இறுதிக்குள் முக்கிய புள்ளிகள் பலர் சிறை செல்வார்கள் – மே தின உரையில் ஜனாதிபதி அநுர
Share
இந்த வருட இறுதிக்குள் முக்கிய புள்ளிகள் பலர் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. வழக்கு விசாரணைகளுக்கு அமைய விரைவாக ஊழல் வாதிகளும் குற்றத்தில் ஈடுபட்டவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர்.
சிறைக்கு சென்றவண்ணமுள்ளனர். இதன் காரணமகவே சில தரப்பினர் அஞ்சுகினறனர்.
அனைத்துக் குற்றவாளிகளையும் சடடத்தின் முன் நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை நீங்கள் வழங்கியுள்ளீர்கள்.அந்த ஆணையை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் செயற்படுகின்றோம்.
மக்களும், அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் அரசாங்கமாக இது அமைந்துள்ளதால், மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமது சேவை அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


