Type to search

Headlines Local News News

அர்ச்சுனாவுக்கு பிணை

Share

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

படவிளக்கம்

கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த காணியின் உரிமை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அக்காணி தமக்குச் சொந்தமானது என அர்ச்சுனா தரப்பும், மற்றுமொரு பெண்ணும் உரிமை கோரி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று பாராளுமன்ற உறுப்பினர் அக்காணியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குச் சொந்தமானது எனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தல் விடுத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link