நேற்று வெனிசுலா, இன்று ஈரான், நாளை கியூபா ட்ரம்பின் திட்டம் நிறைவேறுமா?
Share
கியூபா குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருக்கும் கருத்துகள் பெரும் கவனத்துக்குரியவை.
அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகரில் கடந்த நிகழ்வில் உரையாற்றினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். “கியூபா ஓர் அச்சுறுத்தல்!” அப்போது, ‘கியூபாவில் மிக விரைவில் மாற்றம் வரும்.
அமெரிக்காவின் பெரும் வலிமை, 70 ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஒரு நாளை மிக விரைவில் கொண்டுவரும். அது, கியூபாவுக்கு
ஒரு புதிய விடியல். எங்களிடம் மிகச் சிறந்த கியூப அமெரிக்கர்கள் பலர் இருக்கிறார்கள்.
கொடூரமாக நடத்தப்பட்டவர்கள், வன்கொடுமைக்கு உள்ளானவர்கள், குடும்பத்தினரை இழந்தவர்கள் அவர்கள், இப்போது என்ன நடக்கிறது என்று கியூபாவைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் ட்ரம்ப்.
2026 ஜனவரி 3ஆம் திகதி, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும், அவருடைய மனைவியையும் அமெரிக்கப்படைகள் அதிரடியாகக் கைது செய்தன.
வெனிசுலா தலைநகர் காரகாஸில் இரத்தக்களரியான அந்த இரவுநேர இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் இருவரையும் அமெரிக்காவுக்குக் கடத்திச் சென்ற சம்பவத் துக்குப் பிறகு, ஈரான் பக்கம் தனது கவனத்தைத் திருப்பிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கியூபாவையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
இரண்டாவது முறையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்த பிறகு கியூபாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. வெனிசுலா சம்பவத்துக்குப் பின்னர், அந்த நாட்டிலிருந்து கியூபாவுக்குச் சென்றுகொண்டிருந்த எண்ணெய் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அதனால், கியூபா இருளில் மூழ்கியது. மேலும் பல நெருக்கடிகளைக் கியூபா சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி, “கியூபாவிற்கு இனி எண்ணெய் அல்
லது பணம் எதுவும் செல்லாது – பூஜ்ஜியம்!” என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் வலைத்தளத்தில் பதிவிட்டார். மேலும், “மிகவும் தாமதமாவதற்கு முன்பு ஓர் ஒப்பந்தத்தை கியூபாவின் தலைமை செய்துகொள்ள வேண்டும்” என்ற செய்தியை
யும் ட்ரம்ப் சொன்னார்.
“கியூபா விழப்போகிறது!” பின்னர், ஜனவரி 29ஆம் திகதி, கியூபாவிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் ஏற்றுமதிக் கட்டணங்களை விதிக்க ட்ரம்ப் ஆணை பிறப்பித்தார்.
அவர் கையெழுத்திட்ட அந்த உத்தரவு, “அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்கு அசாதாரணமான, தீவிர அச்சுறுத்தல்” என்று கியூப அரசைக் குறிப்பிடுகிறது.
அதன் பின்பு, கடந்த மார்ச் 6ஆம் திகதி ‘கியூபா மிக விரைவில் விழப்போகி
றது’ என்ற முதன்முறையாக ஆருடம் சொன்ன ட்ரம்ப், கியூபாவிற்கு வெனிசுலா எண்ணெய் அல்லது வருவாய் இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டினார்.
கியூப தலைமையோடு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவை கியூபாவில் அமர்த்தப்போவதாகவும் அது எப்படி வேலை செய்யும் என்று பார்ப்போம்
என்றும் ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்காவின் தற்போதைய கவனம் ஈரான் மீது இருப்பதாகவும், அதே நேரம் தங்கள் “வசம் நிறைய நேரம் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு – கியூபா மாற்றத்திற்குத் தயாராக இருக்கிறது” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரான் போர் முடிந்த பிறகு, தனது நிர்வாகம் “கியூபாவிற்குச் செல்லலாம்”
என்று ஏப்ரல் 13ஆம் திகதி கூறிய ட்ரம்ப், கியூபாவை ‘தோற்று வரும் நாடு’ என்று விபரித்தார். “நீண்டகாலமாக மோசமாக நிர்வகிக்கப்படும் நாடாக கியூபா இருந்து வருகிறது” என்று அந்த நாட்டின் கம்யூனிசத் தலைவர்களை அவர் சாடினார்.
படையெடுப்பை முறியடித்த காஸ்ட்ரோ! 1959ஆம் ஆண்டு, ஃபிடல் காஸ்
ட்ரோ தலைமையில் கியூபாவில் ஒரு கம்யூனிச புரட்சி அரசு மலர்ந்தது.
அதன் நாட்டுடைமை, குடியியல் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தாங்க
முடியாமல் தொழிற்துறையினரும், மத்தியத்தர குடும்பத்தினரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தனர்.
இப்படி முதல் மூன்றாண்டுகள் எழுபது இலட்சம் கியூபர்களில் இரண்டரை
இலட்சம் பேர் அமெரிக்காவுக்குப்புலம் பெயர்ந்தனர். புரட்சிக்குப் பிறகு, இன்று வரை, பதினைந்து இலட்சம் பேர் கியூபாவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் தஞ்சமடைந்த சுமார் 1,400 கியூபர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து ஃபிடல் காஸ்ட்ரோவை அகற்ற அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ திட்டமிட்டது.
அதன்படி, 1961 ஏப்ரல் 17ஆம் திகதி கியூபாவின் தெற்கு கடற்கரையிலுள்ள ஒரு குறுகிய கடற்பகுதியில் ‘பன்றிகள் விரிகுடா’வில் ஒரு படையெடுப்பை அமெரிக்கா நடத்தியது.
அந்தப் படையெடுப்பை மூன்று நாட்களுக்குள் காஸ்ட்ரோவின் படைகள்முறியடித்தன. இது கென்னடி நிர்வாகத்திற்கு, மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைத் தோல்வியாக அமைந்தது. இந்த அமெரிக்க நடவடிக்கை, காஸ்ட்ரோவின் அரசாங்கத்தை சோவியத் ஒன்றியத்திற்கு நெருக்கமாகத் தள்ளியது.
பொருளாதாரப் போர்!
கியூப புரட்சியின் சோசலிசசாரத்தை ஃபிடல் காஸ்ட்ரோ அறிவித்த ஏப்ரல் 16இன் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான மக்களை ஈர்த்த பேரணி கியூபாவில் சென்ற வாரம் நடைபெற்றது. அதில் பேசிய கியூபாவின் தற்போதைய ஜனாதிபதி டியாஸ் – கானெல், “கியூபா ஒரு தோல்வியுற்ற நாடு அல்ல. கியூபா ஒரு முற்றுகையிடப்பட்ட நாடு. பொருளாதாரப் போர், தீவிரப்படுத்தப்பட்ட முற்றுகை, எரிசக்தி முற்றுகை எனக் கியூபா பல பரிமாண ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் நாடு இது” என்று குறிப்பிட்டார்.
மேலும், கியூபாவின் புரட்சி மற்றும் அதன் சமூக நலத்திட்டங்கள் மூலம் சாத்தியமான சாதனைகளை அவர் நினைவு கூர்ந்தார். இலவசக் கல்வி ஆயிரக்கணக்கான நிபுணர்களைப் பயிற்றுவித்துள்ள போதிலும், அவர்களில் பலர் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியேறத் தேர்வு செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“கியூபா அச்சுறுத்தலுக்கு உள்ளானாலும் சரணடை யாத நாடு. சோசலிசத்திற்கு நன்றி” என்றும் டியாஸ்-கானெல் கூறினார்.
“இந்த நேரம் மிகவும் சவாலானது. ஏப்ரல் 16, 1961 அன்றிருந்தது போலவே, இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மீண்டும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
நாம் அதை விரும்பவில்லை, ஆனால், அதைத் தவிர்ப்பதற்கும், அது தவிர்க்க முடியாததாகிவிட்டால், அதைத் தோற்கடிப்பதற்கும் தயாராவது நமது கடமை,” என்றும் டியாஸ்-கானெல் கூறினார்.
காஸ்ட்ரோவின் பேரன்!
இப்படித் துணிவாகப் பேசினாலும் பதற்றத்தைத் தீர்ப்பதற்காக கியூபாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவே செய்திகள் வருகின்றன. இந்தப் பேச்சுக்கு அடுத்த நாளே அமெரிக்க அதிகாரிகள், ஹவானாவில் கியூப அரசு அதிகாரிகளுடன் (பிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரவுல் காஸ்ட்ரோவின் பேரன் ரவுல் கில்லெர்மோ ரோட்ரிக்ஸ் காஸ்ட்ரோவையும் உள்ளடக்கிய குழுவுடன்) சந்திப்பு நடத்தினர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டு
வரும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதிஒபாமா பயணம் மேற்கொண்டதற்குப் பிறகு, முதன்முறையாக அமெரிக்க அரசின் விமானம் கியூபாவில் தரையிறங்கிய தருணம் இது.
“ரவுலிட்டோ” என அழைக்கப்படும் மற்றும் “எல் காங்க்ரெஹோ” (“நண்டு”) எனச் செல்லப்பெயர் கொண்ட இளைய காஸ்ட்ரோ, தனது தாத்தாவின் உண்மையான பிரதிநிதியாக அமெரிக்காவால் கருதப்படுகிறார். கியூபாவில் உண்மையான அதிகாரம் இன்னும் அவரது தாத்தாவிடமே உள்ளது.
ஜனநாயக மற்றும் பொருளாதார சுதந்திரங்களை வலியுறுத்தி, தங்களது அறிவுரையைப் பின்பற்றத் தவறினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அப்போது அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்ததாக அக்ஸியோஸ் செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளது.
கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க உதவுவதற்கான நீண்டகால அமெரிக்கக் கொள்கையையும் அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர். அதாவது, 1959 புரட்சிக்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலங்களுக்காக அமெரிக்கக் குடியிருப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குதல், அரசியல் கைதிகளை விடுவித்தல், கியூப மக்களுக்கு அதிக அரசியல் சுதந்திரங்களை உறுதி செய்து, இறுதியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துதல் போன்றவற்றை அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.
மேலும், அமெரிக்க அதிகாரிகள், கியூப அரசு அனுமதியுடன் அமெரிக்
காவிலிருந்து 100 மைல்களுக்கும் குறைவான தொலைவில் இயங்கும் வெளிநாட்டு உளவு, இராணுவ மற்றும் பயங்கரவாதக் குழுக்கள் குறித்த கவலையையும் அப்போது தெரிவித்தனர்.
கொடூரமான தண்டனை!
பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்றாலும், கியூப மக்களின் இன்றைய நிலைமை படுமோசமாக இருக்கிறது. வெனிசுலா, மெக்ஸிக்கோ, ரஷ்யா ஆகிய
வற்றின் எண்ணெய்யைக் கியூபா பெறுவதைத் தடுக்கும் ட்ரம்ப் நடவடிக்கைகள், கியூபாவில் நீண்டநேர மின் தடைகள், எரிபொருள் பற்றாக்குறை, சுற்றுலாப் பயணிகள் வரத்து இல்லாமை என மக்களின் சிக்கலான நிலையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன.
அமெரிக்க ஜனநாயக கட்சியின் (எதிர்க்கட்சி) மக்களவை உறுப்பினர்கள் பிரமிளா ஜெயபால், ஜொனாதன் ஜாக்சன் ஆகியோர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கியூபாவுக்குப் பயணம் செய்தனர்.
அதன் பிறகு அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், கியூபாவுக்கு எதிராக ட்ரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகள், ‘கொடூரமான கூட்டுத் தண்டனை. பொருளாதார குண்டுவீச்சு. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
கியூபாவின் எண்ணெய் முற்றுகையை அமெரிக்காவின் ஹார்முஸ் நீரிணைத் தடுப்போடு ஒப்பிட்ட ஜாக்சன், “உலகெங்கிலும் எண்ணெய் சுதந்திர
மாகச் செல்வதற்கு, ஹார்முஸ் நீரி ணையைத் திறந்து வைக்க நமது அரசாங்கம் போராடுகிறது. இது, மனிதாபிமான காரணங்களுக்காக நடைபெறும் போராட்டம்.
இதையே கியூபாவிற்கும் நாங் கள் விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார். ஆனால், மனிதாபிமான காரணங்கள் எல்லாம் டொனால்ட் ட்ரம் புக்கு ஒரு பொருட்டு அல்ல. அவரது கணக்கே வேறு!


