சாகரிக்கா ரயிலின் சாரதி உட்பட நால்வர் பணியிடை நீக்கம்
Share
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த போது கடந்த 24ஆம் திகதி தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த புகையிரதத்தின் சாரதி, காப்பாளர், உதவிச் சாரதி மற்றும் உதவிப் புகையிரத காப்பாளர் ஆகியோருக்கே இந்த தடையை விதிக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


