Type to search

Headlines Local News News

பழப் பொதிகளுக்குள் மறைத்து போதைப்பொருளை கடத்த முயன்றவர் கைது

Share

பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பைச் சேர்ந்த 33 வயது இளைஞர், சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

சோதனையின்போது அவரது பயணப் பொதியில் மிக நுணுக்கமான முறையில் மறைக்கப்பட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு புகைப்படக் கலைஞர் என தெரியவந்துள்ளது. 

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link