ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரானார் கௌதம் அதானி!
Share
அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி ஆசியாவின் ஆகச்சிறந்த கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின் முதற்பெரும் கோடீஸ்வரராக விளங்கிய முகேஷ் அம்பானி, இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
புளூம்பெர்க் பிில்லியனர்கள் குறியீட்டின் (Bloomberg Billionaires Index) படி, கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு தற்போது 92.6 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. அதேவேளை, முகேஷ் அம்பானியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 90.8 பில்லியன் டொலர்கள் என அந்தச் சுட்டெண் குறிப்பிடுகின்றது.
உலகளாவிய ரீதியில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் கௌதம் அதானி 19வது இடத்திலும், முகேஷ் அம்பானி 20வது இடத்திலும் உள்ளனர்.
உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 8 இடங்களையும் அமெரிக்கர்களே பிடித்துள்ளனர். இதில் எலோன் மஸ்க் 656 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் இன்னமும் முதலிடத்தில் நீடிக்கின்றார். 286 பில்லியன் டொலர்களுடன் லாரி பேஜ் இரண்டாவது இடத்திலும், 269 பில்லியன் டொலர்களுடன் ஜெப் பெசோஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


