மியன்மாரில் 4000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
Share
மியன்மாரில் 4000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி வின் மின்ட்டும் உள்ளடங்குவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021ம் ஆண்டு இராணுவ புரட்சி ஊடாக அவர் சிறைபிடிக்கப்பட்டார். அவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மியன்மாரின் தற்போதைய ஜனாதிபதி Min Aung Hlaing இன் கையொப்பத்துடன் 4335 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறைவைக்கப்பட்டுள்ள மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூச்சியின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி அறிவித்ததையடுத்து இந்த பொதுமன்னிப்பு தொடர்பான தகவலை மியன்மார் இராணுவ அரசு வெளியிட்டுள்ளது.


