Type to search

Headlines Local News News

எரிசக்தி அமைச்சர் இராஜினாமா

Share

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

நிலக்கரி இறக்குமதி மற்றும் அதனுடன் தொடர்புடைய மின் உற்பத்தி செயற்பாடுகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் இன்றைய தினம் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

விசாரணைகள் பக்கச்சார்பின்றி சுயாதீனமாக இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link