Type to search

Headlines News World News

ஈரானில் பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை!

Share

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.


இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய  பிட்டா ஹெம்மாட்டி (Bita Hemmati), அவரது கணவர் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தத் தீர்ப்புக்குத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன. இந்தத் தண்டனையானது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என அவை சுட்டிக்காட்டியிருந்தன.


சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்களையும் மீறி, ஈரான் நீதிமன்றம் இந்த “உறையவைக்கும் தீர்ப்பை” வழங்கியுள்ளது. இதனால் ஈரான் மற்றும் உலக நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளில் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்தத் தீர்ப்பானது போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link