டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய நாள்… வரலாற்றில் இன்று
Share
1912ம் ஆண்டு இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் இருந்து நியூயார்க்கிற்கு தனது முதல் பயணத்தை தொடங்கிய சொகுசு கப்பலான டைட்டானிக் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய நாள் இன்று.
வரலாற்றின் மிகவும் சோகமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஏப்ரல் 14 இரவு 11:40 மணிக்கு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக், ஏப்ரல் 15, 1912 அன்று அதிகாலை 2:20 மணிக்கு முழுமையாக மூழ்கியது.
இந்த கப்பலில் மொத்தம் 2,224 பேர் இருந்தனர். அதில், சுமார் 1,517 பேர் உயிரிழந்தனர். வெறும் 700 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர் பல ஆண்டுகள் தேடுதலுக்குப் பிறகு, 1985-ம் ஆண்டுதான் கடலின் அடியில் சுமார் 12,500 அடி ஆழத்தில் டைட்டானிக்கின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விபத்துதான் பிற்காலத்தில் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு விதிகளில் (SOLAS) பெரும் மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது.


