Type to search

Headlines Local News News

புத்தாண்டை முன்னிட்டு சுற்றிவளைப்பு: 817 விற்பனை நிலையங்களுக்கு சட்ட நடவடிக்கை!

Share

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது 817 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கையானது  ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட 967 உணவுச் சோதனைகளின் ஊடாகவே இந்த 817 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,300 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பங்கேற்புடன் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, தற்போதும் இந்த நடவடிக்கைகள் தொடர்வதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் கீழ் 11,064 நிறுவனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 967 உணவுச் சோதனைகளும், 3,045 உணவுப் பொருட்கள் பொறுப்பேற்புகளும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், 2,299 சந்தர்ப்பங்களில் உணவுகள் அழிக்கப்பட்டுள்ளதுடன், 817 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.பி. பொரலெஸ்ஸ தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link