Type to search

Headlines Local News News

நேருக்கு நேர் மோதிய சொகுசு பேருந்து, மோட்டார் சைக்கிள் – இருவர் பரிதாபமாக பலி

Share

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தில் வெலிகந்த சுசிரிகம பிரதேசத்தில் சொகுசு பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

சுசிரிகம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையும், காலி பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவான செலுத்துகை காரணமாக  இந்த  விபத்து ஏற்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link