காண்போர் நெஞ்சை நெருடிய ஈரானிய மக்களின் நாட்டுப்பற்று
Share
கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அறிவிப்புகளால் மக்கள் சமூகம் அதிர்ந்து போயிற்று.
ஈரானை ஓர் இரவில் அழிக்கப் போகின்றேன். ஒரு நாகரிகம் அழியப் போகிறது என்ப தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைகள் மனிதநேயமுள்ள எவரையும் ஏக்கமடைய வைத்திருக்கும் என்பதில் இரு வேறு கருத்திருக்க முடியாது.
உண்மை. ஒரு பெரும் வல்லாதிக்க நாட்டின் ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு கூறுவதென்பது அபத்தமானது.
ஏலவே ஈரான் மீது போர் தொடுத்தமை தொடர்பில் அமெரிக்க அதிபருக்கு எதிராகவும் இஸ்ரேல் பிரதமரைக் கண்டித்தும் அந்தந்த நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி கோசமிடுகின்றனர்.
நிலைமை இதுவாக இருக்கையில், ஓர் இரவில் ஒரு நாகரிகம் அழியும் என ஈரான் குறித்து ட்ரம்ப் விடுத்த அதிரடி அறிவிப்பு உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் ஈரானிய மக்கள் ட்ரம்பின் அறிவிப்பை செவிமடுத்த அடுத்த கணமே ஓடி ஒழி யாமல் – பதுங்கு குழிகளை நாடாமல், எங்கள் நாட்டை நாம் காப்பாற்றுவோம் எனக் கர்ச்சித்தவாறு ஈரான் நகரங்களில் ஒன்றுதிரண்டனர்.
“அல்லாகு அக்பர்” என அவர்கள் எழுப்பிய ஒலி வானைப் பிளந்தது.
நாட்டின் எண்ணெய் வளங்கள் – பாலங்கள் – அணுமின் நிலையங்கள் எனத்தங்கள் நாட்டு உட்கட்டமைப்பு வளங்களை சூழ்ந்து கொண்ட ஈரானிய மக்கள், அவற்றின் கவசங்களாக தங்களை நிலைநிறுத்தினர்.
ஆம், அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்துமாயின் குறைந்தது ஒரு தடவையில் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்து போகலாம் எனக் கணிப்பிடக்கூடிய அபாயம் இருந்த போதிலும் ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்ற ஒன்று திரண்டனர் எனும்போது அந்த மக்களின் நாட்டுப்பற்று எத்துணை உன்னதமானதென்பதை எவரும் உணர முடியும்.
ஆம், அமெரிக்க அதிபர் எவ்வளவுதான் எச்சரிக்கை விடுத்தாலும் அந்த எச்சரிக்கை களையயல்லாம் வெற்றுவார்த்தைகளாக ஆக்கிய ஈரான்; இத்துணை நாட்களாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈடுகொடுத்து நிற்கிறதெனில், அதற்கு மூலகாரணம் ஈரானிய மக்கள் தம் நாட்டின் மீதும் தம் ஆட்சித் தலைவன் மீதும் கொண்ட அளவற்ற அன்பும் பற்றுறுதியுமேயாகும்.
அதனாலேயே அமெரிக்காவின் அதட்டல்கள், மிரட்டல்கள், எச்சரிக்கைகள் என எல் லாவற்றையும் துச்சமென நினைத்த ஈரானிய மக்கள் தங்களின் வாழ்வு என்பது, நீண்ட கால பாரம்பரியமும் நாகரிகமும் கொண்ட தங்கள் நாட்டை பாதுகாப்பது என முடிவு செய்தனர்.
அவர்களின் அந்த முடிவும் போர் வந்துற்ற போதும் அல்லாகு அக்பர் என்றுரைக்கும் ஆத்ம பலமும் சேர்ந்து ஈரானை தற்காத்துக் கொண்டது.


