Type to search

Headlines

பணியாளருக்கு தொற்று நெல்லியடியில் வெதுப்பகம் ஒன்றுக்கு சீல்

Share

நெல்லியடி நகரில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வெதுப்பகம் சுகாதாரப் பகுதியினரால் நேற்று திங்கட்கிழமை சீல் வைத்து மூடப்பட்டது.


சில தினங்களுக்கு முன்னர் நெல்லியடி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று திங்கட்கிழமை மாலை கிடைக்கப் பெற்றது.


இம் முடிவின் பிரகாரம் நெல்லியடியில் உள்ள வெதுப்பக நிலையத்தில் பணிபுரிபவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டது.


இதனையடுத்து அங்கு பணிபுரியும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன் வெதுப்பகம் சுகாதாரப் பகுதியினரால் சீல் வைத்து மூடப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link