ஊழியருக்கு தொற்று பருத்தித்துறை நகர சபை மூடப்பட்டது
Share
யாழ்.பருத்தித்துறை நகர சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நகர சபை முடக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் நகர சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கையாக நகர சபை முடக்கப்பட்டுள்ளதுடன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
பரிசோதனைகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.