பருத்தித்துறையில் அதிக மழை
Share
நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 8.30 மணி யிலிருந்து நேற்று வியாழக் கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மழை வீழ்ச்சி நிலைவரப்படி பருத்தித்துறையில் மீண்டும் அதிகூடிய மழைவீழ்ச்சி பதி வாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையான 24 மணித்தியாலத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக பருத்தித்துறையில் 103.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையிலேயே மீண்டும் மேற்படி பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.