யாழ்.பல்கலை மோதல் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த தனிநபர் ஆயம் நியமனம்
Share
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற மோதல் சம்பவம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காகத் தனிநபர் விசாரணை ஆயம் நியமனம் இடம்பெற்றுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை கூடிய சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் எம். நடராஜசுந்தரம் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மோதலில் ஈடுபட்ட கலைப்பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட 21 மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானங்களை எடுக்கவும் அதிஉச்ச அதிகாரத்தை துணைவேந்தருக்கு பேரவை வழங்கியுள்ளது.