Type to search

Headlines

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 384 பேர் நேற்று தனிமைப்படுத்தப்பட்டனர்

Share

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ்.புங்குடுதீவுக்கு 30ஆம் திகதி வந்த பெண்ணுடன் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட 384 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ். புங்குடுதீவுக்கு வந்திருந்த இரு பெண்களில் ஒரு பெண் கொரோனா தொற்றுக்குள்ளானார்.

இதேவேளை மற்றைய பெண் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருந்து வருகின்றார்.
இந்நிலையில் தனிமைப்படுத்தலில் உள்ள பெண் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில் அவருடன் அந்த நிகழ்வில் கலந்து கொண் டிருந்த 384 பேர் நேற்று தனிமைப்படுத் தப்பட்டிருக்கின்றனர்.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link